புதுடெல்லி: ‘காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் கூடுதல் எம்பி-க்களை பெற வேண்டுமானால், ராகுல் காந்தி 7 நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். முக்கியமாக அடிக்கடி வெளிநாட்டுக்கு ‘ரகசிய டூர்’ செல்வதை விட்டுவிட்டு இந்தியாவில் அதிக நேரம் செலவிட வேண்டும்.’ என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை நேரடி விவாதத்திற்கு தயாரா என புதன்கிழமையன்று ராகுல் காந்தி சவால் விடுத்தார். இதற்கு பதிலடியாக அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் தள பதிவில், “அடிக்கடி ரகசிய வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்துவிட்டு, இந்தியாவில் அதிக நேரம் செலவிட வேண்டும். காங்கிரஸ் தலைவர் மூத்தவர்களை மதிக்க வேண்டும். அவர்களிடமிருந்து நல்ல ஞானத்தைப் பெற வேண்டும்; இதுவே நமது இந்தியப் பாரம்பரியம்.
இந்தியாவுக்கு எதிரானவர்களைச் சந்திப்பதையும், அவர்களின் அஜெண்டாக்களைப் பரப்புவதையும் நிறுத்த வேண்டும். பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் பிரதமர் மோடி மீதான தீவிர வெறுப்பை கைவிட வேண்டும்.
பாஜகவை எதிரியாகக் கருதாமல், ஒரு அரசியல் போட்டியாளராக மட்டுமே நினைக்க வேண்டும். நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்துக்கொண்டு, எம்பிக்களை விவாதங்கள் மற்றும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.
இந்திய நாட்டின் அரசியலமைப்பையும், தன்னாட்சி அமைப்புகளையும் மதிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை ஜனநாயக ரீதியில் செயல்பட அனுமதித்து, காலம் காலமாகத் தொடரும் குடும்ப, வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இந்த 7 நிபந்தனைகளையும் ராகுல் காந்தி பின்பற்றினால், காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் கூடுதல் எம்பி-க்களை பெற முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

More Stories
“அரசியலமைப்பின் மீது காங்கிரசுக்கு உண்மையான நம்பிக்கை இல்லை” – அஸ்வினி வைஷ்ணவ் சாடல்
அக்னி வீரர்களுக்கு 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு:
ஆன்லைன் மோசடியில் பணம் இழந்தால் ரூ.25,000 இழப்பீடு!