July 22, 2026

ஒட்டன்சத்திரத்தில் உயிர் பலி வாங்க துடிக்கும் சாலையோர ஆக்கிரமிப்புகள்.

ஒட்டன்சத்திரம் ஜூலை-20

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்    பிரதான சாலைகளில் இருபுறங்களிலும் உள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகளால் அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் சேவை செல்ல இயலாத வகையில் உள்ளது இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.கடந்த கால ஆட்சியிலும் நடந்து வந்த கொடூர விபத்துக்கள் தற்போதைய காலத்திலும் தொடர்வது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.ஒட்டன்சத்திரத்தில் உள்ள போக்குவரத்துக் காவல் சரிவர செயல்படாததால் ஆங்காங்கே குறுக்க மறுக்க வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு கடும் நெரிசலை உருவாக்குகிறது.

எனவே உயிர் சேதத்தை தடுக்கவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மாவட்ட நிர்வாகம் அதிரடியாக நடவடிக்கை எடுத்து ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள அனைத்து பிரதான சாலைகளிலும் இரு புறங்களிலும் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அதிரடியாக அகற்றினால் மட்டுமே பொதுமக்களை காப்பாற்ற இயலும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Spread the love