நடன பயிற்சி பெற்ற மாணவிகளின் முதல் அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை விழா
ஒட்டன்சத்திரம் ஜூலை.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்று வரும் நடராஜ நாட்டியாலயா இசை மற்றும் நடனப்பள்ளியின் சலங்கை பூஜை விழா மற்றும் இரண்டு ஆண்டுகளாக பயிற்சி பெற்ற மாணவிகளின் முதல் அரங்கேற்றம் நிகழ்ச்சி அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயிலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக குத்துவிளக்கேற்றி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒட்டன்சத்திரம் நடராஜ நாட்டியாலயா நடனப்பள்ளியில் இரண்டு ஆண்டுகளாக பயிற்சி பெற்ற மாணவிகளின் காலில் அணியும் சலங்கைகளுக்கு பூஜை மற்றும் சிறப்பு செய்யப்பட்டு மாணவிகளின் காலில் அணிவிக்கப்பட்டது தொடர்ந்து மாணவிகளின் முதல் அரங்கேற்றம் சிறப்பாக நடந்து முடிந்தது.
இந்நிகழ்வில் நடனப்பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டு மாணவிகளின் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.

More Stories
கருர் செப்30
கரூர்
உலக இதய தினத்தை முன்னிட்டு கரூர்அப்போலா மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடந்தது.