ஒட்டன்சத்திரம் மார்ச். ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அர.சக்கரபாணி 7-வது முறையாக களம் இறங்கியுள்ளார்.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக அர.சக்கரபாணி மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 1996 முதல் 2021 வரை நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் தொடர்ந்து 6 முறை வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். திமுக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை தமிழக அரசு தலைமை கொறடா மற்றும் 2011 முதல் 2021 வரை திமுக கொறடாவாக இருந்தார். 2021 முதல் 2026 வரை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பதவி வகித்தார். இவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். பி.ஏ. (பொருளாதாரம்) படித்துள்ளார். தற்போது திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ளார். ஒட்டன்சத்திரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் இவர் நேற்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அர.சக்கரபாணி
7-வது முறையாக களம் இறங்கியுள்ள இவர் வெற்றிபெற்று சாதனை படைப்பார் என்று ஒட்டன்சத்திரம் தொகுதி மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More Stories
தமிழக ஆளுநர் நாளை சென்னை வருகை: அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக 19 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடப்பட்ட புகைப்படம்
திருப்பூர்