மிக அமைதியானவராக அறியப்பட்டாலும், அவர் ஆற்றும் மக்கள் பணிகள் ‘அர்த்தம் நிறைந்தவை’. இன்னும் சொல்லப்போனால், சாமானிய மக்களின் ‘வாழ்வை வசந்தமாக்குபவை’.
கல்விக்கும், அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தவும் 2 முறை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், 3 முறை சட்டமன்ற உறுப்பினர் என கடந்த 25 ஆண்டுகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இம்மண்ணில் அவர் ஆற்றிய பணிகள் எண்ணிலடங்காதவை.
மிகக் குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில்…
•குன்னம் தொகுதி முழுக்க தரமான சாலை வசதிகள்.
•அரசு மாதிரிப் பள்ளி.
•அரசு தொழிற்பயிற்சி நிலையம்.
•தமிழ்நாட்டில் அமைக்கப்பட்ட 2 போக்குவரத்து பணிமனைகளையும் தம் தொகுதியான குன்னம் மற்றும் செந்துறைக்கு கொண்டு வந்து சேர்த்திட்ட வரலாற்றுச் சாதனை.
•குன்னம் தொகுதியில் மின் கோட்ட அலுவலகம்.
•செந்துறையில் புதிய 110/33 KV துணைமின் நிலையம் கட்டும் பணி துவக்கம்.
•வெள்ளாறு, மருதையாற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட மேம்பாலங்கள்.
•அரியலூர் – செந்துறை – ஜெயங்கொண்டம் 4 வழிச்சாலை.
குக்கிராமங்களில் கூட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் அமைத்து ‘பாமர’ மக்களின் உடல்நலம் காத்தது என அவர் ஆற்றிய பணிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
மேலுள்ள அனைத்தும் அரசின் மூலம் கொண்டு வந்து சேர்த்திட்ட திட்டங்கள்.
அதேவேளையில், எளிய பின்னணியில் இருந்து கல்வி கற்க வந்திடும் மாணவச் செல்வங்களுக்காக, அவர்தம் பெற்றோரின் பொருளாதாரச் சுமையை குறைக்கும் விதமாக…
•கட்டணமில்லா கணினி பயிற்சி மையம்.
•கட்டணமில்லா தையல் பயிற்சி மையம்.
•கட்டணமில்லா TNPSC போட்டித்தேர்வு பயிற்சி மையம்.
•கட்டணமில்லா காவலர் தேர்வு பயிற்சி மையம் போன்றவற்றை தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் ஏற்படுத்தி, நாளைய தலைமுறையினர் வாழ்வு சிறக்க அர்ப்பணிப்புடன் சேவையாற்றுபவர் திரு எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, வறிய மாணவச் செல்வங்களின் கல்விச் செலவையும் ஏற்றுக்கொண்ட மாமனிதரிவர்.
அப்படியான மனிதரின் பெயர், மீண்டும் குன்னம் தொகுதியின் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் ஒன்று திரண்டு பட்டாசு வெடித்து, வாழ்த்து முழக்கங்கள் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி தீர்த்தனர்.
மே 4-ஆம் தேதியன்று காணவேண்டிய காட்சிகளை, நேற்றே குன்னம் தொகுதியில் காண முடிந்ததென்றால் அதுதான், அவரது ‘மக்கள் பணிக்கான அங்கீகாரம்’.
சிவசங்கர் சா.சி அவர்களது மக்கள் பணி தொடரட்டும், குன்னம் தொகுதி மின்னட்டும்…

More Stories
தமிழக ஆளுநர் நாளை சென்னை வருகை: அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி பொதுமக்கள் நலன் கருதி மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக 19 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடப்பட்ட புகைப்படம்
திருப்பூர்