June 2, 2026

ஒட்டன்சத்திரம் பகுதியில் 

கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – ஆய்வாளர் லிங்கபாண்டியன் அதிரடி அறிவிப்பு

ஒட்டன்சத்திரம் ஜூன்.

ஒட்டன்சத்திரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்றுள்ள ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளர் லிங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் ஆய்வாளர் லிங்கபாண்டியன் அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்றனர். அப்போது, காவல் ஆய்வாளர் லிங்கபாண்டியன் சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்கள் மத்தியில் கூறுகையில், ஒட்டன்சத்திரம் பகுதி முழுவதும் கள்ளச்சந்தையில் மது பாட்டில் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சட்ட ஒழுங்கை சீர்படுத்துவதற்கும் சமூக ஆர்வலர்களான தங்களுடைய முழு ஒத்துழைப்பு வேண்டுமெனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்; சங்கத்தின் திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தலைவர் ப.உதயன் (எ) ப.உதயகுமார், மாவட்ட பொருளாளர் ஆ.இளங்கோவன் மற்றும் சங்கத்தின் மேசியா ஸ்டுடியோ ஆ.முத்துச்சாமி, ஆர்.ஆர்.ரமேஷ், பி.சண்முகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Spread the love