ஒட்டன்சத்திரம். நவ.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சார்பு நீதிமன்றத்தில், பெண்களை பாலியல் தொந்தரவுகளில் இருந்து பாதுகாக்கும் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு சார்பு நீதிபதி ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி கபாலீஸ்வரன், குற்றவியல் நடுவர் நீதிபதி பிரவீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொந்தரவுகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்டங்கள், பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்புகள், புகார் அளிக்கும் நடைமுறைகள் குறித்து வழக்கறிஞர் சி. பாக்கியலட்சுமி விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நீதிமன்றப் பணியாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
ஒட்டன்சத்திரம் கேதையுறம்பு ஊராட்சியில் 5 ஆண்டுகளாக பட்டா கிடைக்காமல் தவித்த ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கல்!
கரூர் மாவட்டம்
கரூர் மாவட்டம்