இன்று தமிழ்நாட்டில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.கடந்த இரண்டு மணி நேரத்தில் அதிகப்படியான வாக்குப்பதிவு நடந்த மாவட்டங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்
இன்று தேர்தல் நாளாகும்.தமிழ்நாட்டில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி புதுச்சேரியில் தேர்தல் நடைபெற்றது. அங்கு கடந்த சட்டமன்ற தேர்தலை விட இந்த தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகின. அதைப்போல தமிழ்நாட்டிலும் கடந்த முறையை விட இம்முறை அதிகப்படியான வாக்குகள் பதிவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அப்படி எதிர்பார்த்ததை போல தற்போதைய நிலவரப்படி கடந்த முறையை விட இம்முறை தமிழ்நாட்டில் அதிகப்படியான வாக்குகளே பதிவாகி இருக்கின்றன. காலை 9 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் இதுவரை 17 .69 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 13 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.
திருப்பூர்
ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் காலை ஒன்பது மணி நிலவரப்படி 17 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த இரண்டு மணி நேரத்தில் 20 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றது. அதற்கு அடுத்தபடியான விருதுநகர் மாவட்டத்தில் 18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதைத்தொடர்ந்து வேலூர் ,விழுப்புரம் ,மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 17 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டிலேயே இதுவரை கடந்த இரண்டு மணி நேரத்தில் திருப்பூர் மாவட்டத்தில் தான் அதிகப்படியாக 20 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது
திருப்பூர் – 20 .38 %
விருதுநகர் – 18 .02 %
வேலூர் -17 .96 %
திருவண்ணாமலை – 17 .80 %
விழுப்புரம் -17 .76 %

More Stories
கள் தடையை நீக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
‘மேகேதாட்டு அணை கட்டப்பட்டால்…’ – பேரவையில் சவுமியா ‘அலர்ட்’ பட்டியல்
குதிரை பேர வழக்கில் 14-வது நபருக்கும் ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்