September 22, 2026

கரூர் மாவட்டம்

 கரூர் செப் 22: 

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் .சி.முத்துக்குமரன்  தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்நடைபெற்றது.மாவட்ட ஆட்சித்தலைவர் .சி.முத்துக்குமரன் தெரிவித்ததாவது,பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெனவும், குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன்கள், பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 766 மனுக்கள் வரப்பெற்றன.

மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி மனுக்களை வழங்கும் வகையில் மாவட்ட ஆட்சியரகத்தின் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென நடத்தப்பட்டு வரும் குறைதீர் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 57 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சி.முத்துக்குமரன் தெரிவித்தார். 

இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.15,750 மதிப்பீட்டில் சக்கர நாற்காலி, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.3,285 மதிப்பீட்டில் காதொலிகருவிகள், என மொத்தம் 3 பயனாளிகளுக்கு ரூ.22,320 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் .சி.முத்துக்குமரன்  வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் விமல்ராஜ், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் ராஜகோபால், மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love