பெங்களூரு: கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட 4 பேர் மாநிலங்களவைக்குப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் காலியாக இருந்த 4 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 18ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சட்டபேரவையில் உள்ள எம்எல்ஏ.க்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப காங்கிரஸுக்கு 3 இடங்களும், பாஜகவுக்கு 1 இடமும் கிடைக்கும்.
காங்கிரஸ் சார்பில் கட்சியின் தேசிய தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, மூத்த நிர்வாகிகள் பவன் கேரா, மன்சூர் அலி கான் ஆகியோரும் பாஜக சார்பில் பேரா.நாகராஜும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். வேறு வேட்பாளர்கள் யாரும் போட்டியிடாததால் நால்வரும் எளிதாக வெற்றி பெறும் நிலை உருவானது.
இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவை செயலாளர் விசாலாக் ஷி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “கர்நாடகாவில் 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் போட்டி வேட்பாளர்கள் யாரும் இல்லை. எனவே, மல்லிகார்ஜுன கார்கே, பவன் கேரா, மன்சூர் அலிகான், நாகராஜ் ஆகிய 4 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

More Stories
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
மம்தாவுக்கு தொடர்ந்து பின்னடைவு.. ஒரேவாரத்தில் 3 எம்பிக்கள் காலி.. தகர்ந்த TMC கோட்டை!
ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்: முதல்வர் விஜய் அறிவிப்பு