மாலி: தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் யு20 சாம்பியன்ஷிப் போட்டி மாலத்தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டியில் இன்று இந்திய அணி, வங்கதேசத்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்திய அணி அரை இறுதி ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் பூடானை வீழ்த்தியிருந்தது. அதேவேளையில் வங்கதேச அணி 1-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை தோற்கடித்து இருந்தது.
தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பின் யு 20 சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி ஏற்கெனவே 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இம்முறை 5-வது முறையாக பட்டம் வெல்வதில் தீவிரம் காட்டக்கூடும். நடப்பு தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்து இருந்தது.

More Stories
“எப்போது வேண்டுமானாலும் 3 சிக்ஸர், பவுண்டரிகளை என்னால் விளாச முடியும்” – மனம் திறக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி
டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை: 6-வது இடத்துக்கு சரிந்த இந்தியா
2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி: பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றி வங்கதேச அணி சாதனை