சாமர்கண்ட்: செஸ் ஒலிம்பியாட் போட்டி உஸ்பெகிஸ்தானில் உள்ள சாமர்கண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவு 2-வது சுற்றில் இந்திய அணி நேற்று இந்தோனேஷியாவை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
நிஹால் சரின் மட்டும் தனது ஆட்டத்தில் வெற்றி பெற்றார். பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜராத்தி ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனர். மகளிர் பிரிவில் இந்திய அணி 3.5-0.5 என்ற கணக்கில் ஃபின்லாந்தை தோற்கடித்தது.
திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், சவிதா ஆகியோர் வெற்றி பெற்ற நிலையில் ஆர்.வைஷாலி தனது ஆட்டத்தை டிரா செய்திருந்தார். இந்திய அணிகளுக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.

More Stories
சச்சின், திராவிட், கங்குலியின் நிபுணத்துவத்தை பயன்படுத்த பிசிசிஐ-க்கு கவாஸ்கர் கோரிக்கை
மோசின் நக்வியிடமிருந்து ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
மகளிர் ஆசிய கோப்பை டி20 இறுதிக்கு முன்னேறியது இந்தியா!