ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லிம் பஜாரில் அஇஅதிமுக சார்பில் திமுக ஆட்சிக்கு எதிராக கண்டன தெருமுனைப் பிரச்சாரம் அதிமுக நகர் செயலாளர் ஜகுபர் உசேன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த கவலைக்குரியதாக இருப்பதாக கடுமையாக குற்றம்சாட்டினார். இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டிய அரசே, அவர்களை வழிகெடுக்கும் சூழலை உருவாக்கி வருவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு திருப்புல்லாணி ஒன்றிய கழகச் செயலாளர் கருப்பையா, சங்கர பாண்டியன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ராமசேது, முன்னாள் சேர்மன் ராமமூர்த்தி, முன்னாள் ராம்கோ தலைவர் சுரேஷ், மாவட்ட துணைச் செயலாளர் முஜிப் ரஹ்மான், இளைஞரணி துணைச் செயலாளர் சுரேஷ் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

More Stories
ஈரோடுமாவட்டம்
பழனியில் ரூ 100 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர் தீன் மரணம் அடைந்தார்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்ட வருசநாடு மக்கள் – “மலைக்கிராமங்களில் இருந்து வெளியேற்றக் கூடாது” என முழக்கம்