September 26, 2026

ராமநாதபுரம் சி.எஸ்.ஐ கல்வியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தின விழா:

இராமநாதபுரம் செப் 26-

ராமநாதபுரம் சி. எஸ். ஐ கல்வியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் தாளாளர் தேவ மனோகர் மார்ட்டின் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர். ஆனந்த் நாட்டு நலப்பணி திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் மற்றும் தன்னலம் கருதாமல் செய்யப்படும் சேவைகள் குறித்து கருத்துரை வழங்கினார். கல்லூரியின் நாட்டு பணித்திட்ட மாணவர்களுக்கு கல்லூரியின் யோகா பயிற்றுநர் கற்பகவள்ளி அவர்களால் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. பின்பு, கல்லூரி வளாகத்தை தூய்மை செய்து, கல்லூரி முதல்வர், உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவ ஆசிரியர்களால் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்வுகள் அனைத்தும் கல்லூரியின் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் சுகந்தி ஜெனிபா அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.

Spread the love