August 10, 2026

கீழக்கரையில் சிறுவர்களுக்கான கபடி போட்டி,,

Oplus_16908288

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புது கிழக்குத் தெரு மக்கள் மற்றும் இளைஞர்கள் பொதுநல சங்கம் சார்பில் சிறுவர்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது. போட்டியை சங்கத்தின் துணைத் தலைவர் அசன், செயலாளர் ஹபீப் ரஹ்மான், பொருளாளர் முகைதீன் பஃஹத், செயற்குழு உறுப்பினர் முஹம்மது பாக்கர் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தனர் இதில் பெரியகாடு கபடி குழு, ஜெட் மோர் குளம், ஏர்வாடி லவ் பேர்ட்ஸ், காஞ்சிரங்குடி, டேஜர் பாய்ஸ் உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்றன.

சிறுவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்து, அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் நோக்கில் நடைபெற்ற இப்போட்டியில் வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Spread the love