இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் கழக மாவட்ட செயலாளருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்வில் நகர் கழக செயலாளர் பசீர் அஹமத், துணைச் செயலாளர் ஜெய்னுதீன், நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா, துணைத் தலைவர் ஹமீது சுல்தான், நகர்மன்ற உறுப்பினர்கள் சப்ராஸ் நவாஸ், ஷேக் உசைன், சித்திக் மீரான் அலி, நசுருதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் வட்டக் கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

More Stories
போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் உதடு, அண்ணப்பிளவு சிகிச்சைக்கு ஒருங்கிணைந்த மையம்
தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
பழனியில் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது