
இராமநாதபுரம் மாவட்டம் தனியார் மகாலில் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கீழக்கரை நகராட்சி மற்றும் சாயல்குடி பேரூராட்சியைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில், அனைத்து அரசுத் துறைகளும் இணைந்து ஒருங்கிணைந்த அரசு சேவை மற்றும் நலத்திட்ட சிறப்பு முகாம் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணவேணி மற்றும் சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
முகாமில் தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை பதிவு மற்றும் புதுப்பித்தல், குடும்ப அட்டை தொடர்பான சேவைகள், பட்டதாரி சான்றிதழ் பெறுதல், ஆதார் அட்டை சேவைகள், தாட்கோ மூலம் கடனுதவி, மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன.
முகாமில் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, கீழக்கரை நகராட்சி மற்றும் சாயல்குடி பேரூராட்சியின் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தூய்மை பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான அரசுச் சேவைகளை ஒரே இடத்தில் வழங்கினர்.
இந்த முகாமிற்கு நகர்மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் தலைமை வகித்தார். நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா முகாமிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தார். வரவேற்புரை வழங்கினர்.
இந்த சிறப்பு முகாமில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு அரசின் நலத்திட்ட சேவைகளைப் பெற்று பயன்பெற்றனர்.

More Stories
19-09-2026
குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும் பொதுமக்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் வேண்டுகோள்
கீழக்கரை கடற்கரையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தூய்மை பணி