ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, கீழக்கரை நகராட்சி, AWBI, கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் International Trust of Peace அமைப்பின் ஒருங்கிணைப்புடன் தெருநாய்களுக்கான இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு (ABC) மற்றும் ரேபிஸ் தடுப்பூசி (ARV) பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுவரை 491 நாய்களுக்கு ARV தடுப்பூசி செலுத்தும் இலக்கு முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ABC அறுவை சிகிச்சைப் பணிகளில் 22 சதவீதம் நிறைவடைந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்களுக்கு V வடிவக் காது அடையாளமிடப்பட்டு, சிகிச்சைக்குப் பின்னர் அவை பிடிக்கப்பட்ட அதே பகுதிகளில் மீண்டும் விடப்படுகின்றன.
தெருநாய்கள் தொடர்பான புகார்கள் 24 மணி நேரமும் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், வளர்ப்பு நாய்களுக்கு உரிய உரிமம் பெற்று முறையாகப் பராமரிக்குமாறு நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமையிலான நிர்வாக ஒருங்கிணைப்பில், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா மேற்பார்வையிலும், மேற்பார்வையாளர்கள் பாலா மற்றும் தஅஜய் கள ஒருங்கிணைப்பிலும் இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

More Stories
200கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசை பொருட்கள்:அமைச்சர் வழங்கல்
கீழக்கரை நகராட்சியில் நான்கு வகை குப்பைகள் பிரிப்பு:
பழனியில் குதிரை வண்டி குதிரைகளுக்கு தடுப்பூசி முகாம்