October 14, 2026

கீழக்கரை நகராட்சியில் நான்கு வகை குப்பைகள் பிரிப்பு: 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் வகையில், வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை நான்கு வகைகளாகப் பிரித்து வழங்கும் பணிகளை நகர்மன்றத் தலைவர் செஹனாஸ் ஆபிதா நேரில் ஆய்வு செய்தார்.

மக்கும் குப்பைகள், மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகள், அபாயகரமான குப்பைகள் மற்றும் சிறப்புக் கவனம் தேவைப்படும் குப்பைகளைத் தனித்தனியாகச் சேகரிக்க தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

கீழக்கரையை குப்பையில்லா நகராட்சியாக மாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

Spread the love