February 7, 2026

கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்: அங்கன்வாடி பணியாளர்கள் கைது

நாமக்கல்லில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 அங்கன்வாடி பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின், மாவட்ட கிளை சார்பில், காலவரையற்ற தொடர் காத்திருப்பு போராட்டம், நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அனுராதா தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பூங்கொடி, மாநில நிர்வாகி பாண்டிமா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக தேர்தல் வாக்குறுதி 313ஐ நிறைவேற்ற வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பவேண்டும், பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்பவை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து பார்க் ரோட்டில் இருந்து மெயின் ரோட்டுக்கு சென்று, பணியாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பல பெண்கள் சாலையில் படுத்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறியலில் ஈடுபட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்து பேருந்தில் அழைத்துச்சென்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

image.png
Spread the love