மார்ச் 6 முதல் 27 வரை நடைபெறுகிறது

Follow Us
சென்னை: முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான க்யூட் நுழைவுத் தேர்வு மார்ச் 6 முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான தேர்வுக் கால அட்டவணையை என்டிஏ வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெறவேண்டும்.
இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி, வரும் (2026-27) கல்வி ஆண்டில் முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு கணினி வழியில் மார்ச் மாதம் நடத்தப்பட உள்ளதாக என்டிஏ அறிவித்தது.
இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த டிச.14-ல் தொடங்கி ஜன.25-ம் தேதியுடன் முடிந்தது. 4.11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், தேர்வுக் கால அட்டவணையை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, க்யூட் தேர்வு மார்ச் 6 முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கான விரிவான கால அட்டவணை https://exams.nta.ac.in/CUET-PG என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற தளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது helpdesk-cuetpg@nta.ac.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

More Stories
பிஎட், எம்எட் மாணவர் சேர்க்கைக்கு விவரம் சமர்ப்பிக்க அவகாசம்
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் கவிதா தகவல்
பிஎச்டி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு