September 23, 2026

கரூர்

கரூரில் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போது. விவசாயிகள் கூட்டுறவில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய கோரி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தையும், போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், நடந்து வரும் வேளையில் கூட்டுறவில் பணிபுரியும் ஒரு சில அதிகாரிகள் விவசாயிகளிடையே கடுமையான சொற்களை பயன்படுத்துவதால் மன உளைச்சலுக்கு ஆளாகி கரூர் மாவட்டம், மன்மங்கலம் வட்டம், முனியப்பனூர் காளிபாளையத்தை சேர்ந்த கந்தசாமி என்பவர் மரணமடைந்தார். இவருடைய குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வழக்கு பதிவு செய்ய கோரியும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர்  ஈசன் முருகசாமி அவர்கள் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில மாவட்ட  விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Spread the love