November 3, 2026

சமூக ஆர்வலர் ஈபி சரவணன் சார்பில் தீபாவளி திருநாள் உதவிகள் வழங்கும் விழா

திருப்பூர் போயம்பாளையத்தில் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் சோசியல் வெல்பர் டிரஸ்ட் சார்பில் 13-ஆம் ஆண்டு தீபாவளி விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. சமூக ஆர்வலரும் டிரஸ்ட் தலைவருமான ஈ.பி.அ.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், 250-க்கும் மேற்பட்ட எளிய மக்களுக்குத் தீபாவளி நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டன திருப்பூர், அவினாசி, காங்கேயம், பல்லடம், உடுமலை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து கடந்த ஒரு மாதமாகத் திட்டமிட்டுத் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள், திருநங்கைகள் மற்றும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆகியோருக்கு இந்த உதவிகள் நேரடியாக வழங்கப்பட்டன.நெஞ்சை நெகிழ வைத்த பரிசுகள்:புத்தாடைகள், இனிப்புகள், மற்றும் சிறப்பு போனஸ் ரொக்கம் வழங்கப்பட்டது.சிவகாசி தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், டிரஸ்ட் நிர்வாகிகள் நேரடியாகச் சிவகாசிக்கே சென்று ஆய்வு செய்து வாங்கிய தரமான பட்டாசு பெட்டகங்கள் வழங்கப்பட்டன.மின் விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் இந்த விழா பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நல்லூர் நுகர்வோர் மன்றத் தலைவர் சண்முக சுந்தரம், மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், பிளையர்ஸ் உரிமையாளர் பிரகாஷ், இராதாகிருஷ்ணன், பல்லடம் மணிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.மேலும், சங்க நிர்வாகிகள் சின்னத்துரை, வெள்ளையப்பன், நாகராஜன், ராஜசெல்வம், கருணாகரன், சுப்பிரமணியம், 10இயக்க செல்லம், மூர்த்தி, பாலகுமார், ஜானகிராமன், ஜான் மொண்டோன்ஷா, ஈரோடு ஓவியர் வள்ளி நாராயணன், சந்திரன், செல்வராஜ் மற்றும் நுகர்வோர், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் நல சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பயனாளிகளை வாழ்த்தினர்

Spread the love