May 15, 2026

சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

புதுடெல்லி: உள்​நாட்​டில் சர்க்​கரை தட்​டுப்​பாட்​டைப் போக்​க​வும், விலை​யேற்​றத்​தைக் கட்​டுப்​படுத்​த​வும் சர்க்​கரை ஏற்​றும​திக்கு வரும் செப்​டம்​பர் 30-ம் தேதி வரை தடை விதித்து மத்​திய அரசு உத்​தர​விட்​டுள்​ளது. மேலும் இந்த தடை உத்​தரவு உடனடி​யாக அமலுக்கு வரு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இது​வரை சர்க்​கரை ஏற்​றும​தி​யானது ‘கட்​டுப்​படுத்​தப்​பட்ட’ பிரிவின் கீழ் இருந்​தது. இதன் காரண​மாக, ஏற்​றுமதி செய்​வதற்கு மத்​திய அரசிடம் உரிய உரிமம் பெற வேண்​டியது கட்​டாய​மாக இருந்​தது. இந்​நிலை​யில், தற்​போது அந்த விதி​களில் மாற்​றம் செய்யப்​பட்டு சர்க்​கரை ஏற்​றும​திக்கு முழு​மை​யாகத் தடை விதிக்கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து வெளி​நாட்டு வர்த்தக தலைமை இயக்​குநரகம் மே 13ம் தேதி​யிட்ட அறிவிக்​கை​யில் தெரி​வித்​துள்​ள​தாவது: “கச்சா சர்க்​கரை, வெள்​ளைச் சர்க்​கரை மற்​றும் சுத்​தி​கரிக்​கப்​பட்ட சர்க்கரை ஆகிய​வற்​றின் ஏற்​றும​திக் கொள்​கை​யில் மாற்​றம் செய்யப்​பட்​டுள்​ளது. அதன்​படி, 2026 செப்​டம்​பர் 30ம் தேதி வரை அல்​லது அடுத்த உத்​தரவு வரும் வரை சர்க்​கரை ஏற்​றும​திக்​குத் தடை விதிக்​கப்​படு​கிறது.

அதே வேளை​யில், ஐரோப்​பிய ஒன்​றி​யம் மற்​றும் அமெரிக்காவுக்கு வழங்​கப்பட வேண்​டிய குறிப்​பிட்ட அளவு சர்க்கரை ஏற்​றும​திக்கு (CXL மற்​றும் TRQ ஒதுக்​கீடு) இந்​தத் தடையிலிருந்து விலக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், முன்​கூட்டியே அனு​மதி பெற்ற திட்​டங்​கள் மற்​றும் அரசு ஒப்​பந்​தங்​கள் அடிப்​படையி​லான ஏற்​றும​திக்​கும் இந்​தத் தடை பொருந்​தாது. இவ்வாறு அறிவிக்​கை​யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love