July 15, 2026

சாட்ஜிபிடி, ஜெமினி, நோட்புக் எல்​.எம். போன்ற ஏஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செயலி உருவாக்க பயிற்சி இன்று தொடக்கம்

சென்னை: கிண்​டி​யில் செயல்​பட்டு வரும் தொழில்​முனை​வோர் மேம்​பாடு மற்​றும் புத்​தாக்க நிறு​வனத்​தில் செயற்கை நுண்​ணறிவை (ஏஐ) பயன்​படுத்தி செயலி உரு​வாக்​கு​வது குறித்த 3 நாள் பயிற்சி வகுப்பு இன்​று (15-ம் தேதி)​ முதல் ஜூலை 17-ம் தேதிவரை நடை​பெறவுள்​ளது.

இந்த வகுப்​பில் சாட்ஜிபிடி, ஜெமினி ப்ரோ, நோட்​புக் எல்​.எம். கிளைடு, ஜேபியர், போல்ட், ஃபயர்​பேஸ், ரெப்​லிட் போன்ற பிரபல​மான தளங்​களைக் கொண்டு நேரடி​யாக செயலிகளை உரு​வாக்க கற்​றுக்​கொடுக்​கப்​படும்.

இத்​துடன் முன்​னணி ஸ்டார்ட்​-அப் நிறு​வனங்​கள் பயன்​படுத்​தும் ஏஐ கருவி​கள், செயலிகளை உரு​வாக்க தேவைப்​படும் ஏஐ ப்ரோடோடைப்​கள், ப்ராம்ட் இன்​ஜினியரிங் முறை​கள், ஏஐ வலை​தளங்​களை உரு​வாக்​குதல், அதற்​கான செயல்​முறை பயிற்​சி, தொழில்​துறைக்கு தேவை​யான தானி​யங்கி முறை​கள், கல்​வி, சுகா​தா​ரம், நிதி, சில்​லறை வணி​கம் போன்ற துறை​களுக்​கான பயன்​பாட்டு மாதிரி​கள், ஏஐ வணி​கம் மற்​றும் ப்ரோடோடைப்பை முதலீட்​டாளர்​கள் முன் சமர்ப்​பிக்​கும் திறன், குறைந்த செல​வில் ஸ்டார்ட்​-அப் யோசனை​களை பரிசோ​தித்​தல் உள்​ளிட்​டவை குறித்து விளக்​கப்​படும்.

பயிற்​சி​யில் பங்​கேற்க விரும்​பும் 18 வயதுக்கு மேற்​பட்ட, 10-ம் வகுப்பு தேர்ச்​சி​யடைந்த ஆண், பெண் அனை​வரும் விண்​ணப்​பிக்​கலாம். கணினி அனுபவம் அவசி​யம். வெளி மாவட்ட பயனாளர்​களுக்கு தங்​கும் விடுதி ஏற்​படுத்​தித் தரப்​படும்.

கூடு​தல் விவரங்​களுக்கு www.editn.in அல்​லது 8668100181, 9360221280 என்ற எண்​களைத் தொடர்பு கொள்​ளலாம். பயிற்​சியை முடிப்​பவர்​களுக்​கு அரசு சான்​றிதழும்​ வழங்​கப்​படும்​.

Spread the love