சென்னை: அரசு சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியில் வழங்கப்படும் முதுகலை சட்டப்படிப்பு (எல்எல்எம்) மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 13 என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர் நலனை கருத்தில்கொண்டு கடைசி நாள் ஜூலை 17-ம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, விண்ணப்பதாரர்கள் சட்டப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் (www.tndalu.ac.in) வாயிலாக வரும் 17-ம் தேதி மாலை 5.45 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். இத்தகவலை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை. பதிவாளர் கவுரி ரமேஷ் தெரிவித்துள்ளார்.

More Stories
டெட்: தகுதியானதா ‘தகுதித் தேர்வு’?
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 ஆண்டுகளில் 7.39 லட்சம் வீழ்ச்சி – அன்புமணி ஆதங்கம்
ராமராஜ் காட்டன் வழங்கும் ‘இந்து தமிழ் திசை – அன்பாசிரியர்’ விருது: விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 26 வரை நீட்டிப்பு