சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடியேற்றும் முன் ‘வந்தே மாதரம்’ பாடப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம், மதுரை அமர்வு மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு முந்தையநாள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 15 நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தொடங்கப்பட்டது.
இந்நிலையில், நாளை (ஆகஸ்ட் 15) நடக்க உள்ள சுதந்திர தின விழாவின் போது, தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன், வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும் எனவும், தேசியக் கொடி ஏற்றிய பின் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் எனவும், உயர் நீதிமன்ற பதிவுத்துறை, உயர் நீதிமன்றம், மதுரை அமர்வு, கீழமை நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது.
வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டை முன்னிட்டு, மத்திய அரசின் அறிவுரைப்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

More Stories
சுதந்திர தினத்தையொட்டி காவல், தீயணைப்பு துறைகளைச் சேர்ந்த 1,057 பேருக்கு பதக்கங்களை அறிவித்தது ஒன்றிய அரசு
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றும் முன் தேசிய பாடலான வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும்: ஐகோர்ட் பதிவுத்துறை அறிவுறுத்தல்
80-வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னையில் 30 கோயில்களில் அமைச்சர்கள் பங்கேற்புடன் சிறப்பு வழிபாடு, பொது விருந்து