தவெகவின் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்.

ஜோசப் விஜய் பெயரில் தவெகவின் முதல் விருப்ப மனு.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் விருப்ப மனுவை அந்தக் கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் சார்பில் கட்சி நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்டோர் ரூ. 100 செலுத்தி தங்களது விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொண்டனர்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு இன்று (பிப். 6) முதல் விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
விருப்ப மனுக்களை பிப்.14 ஆம் தேதி வரை தவெக தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
தவெக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூரில் விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியது. நாளை முதல் காலை 10 மணி முதல், மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
விருப்பம் உள்ளவர்கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் என்று தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Stories
வெற்றி பெற்ற நாங்க அமைதியாக இருக்கின்றோம் : முக ஸ்டாலின் -உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கம் – அண்ணாமலை அறிவிப்பு
முதலமைச்சர் விஜய்யை சந்தித்த மதிமுக எம்.பி துரை வைகோ