2025-27-ம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி 6-ம் இடத்துக்கு சரிந்துள்ளது. சில்ஹெட் நகரில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வங்கதேச அணி டெஸ்ட் சாம்பியன் தரவரிசையில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரை வங்கதேசம் முழுமையாகக் கைப்பற்றியதால் அந்த அணி அதிக புள்ளிகளைப் பெற்று தரவரிசையில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வங்கதேச அணி 58.330 புள்ளிகளையும், இந்தியா 48.150 புள்ளிகளையும் பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி 87.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
சச்சின், திராவிட், கங்குலியின் நிபுணத்துவத்தை பயன்படுத்த பிசிசிஐ-க்கு கவாஸ்கர் கோரிக்கை
மோசின் நக்வியிடமிருந்து ஆசிய கோப்பையை பெற மறுத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
மகளிர் ஆசிய கோப்பை டி20 இறுதிக்கு முன்னேறியது இந்தியா!