November 26, 2026

தமிழகத்​துக்கு 15 நாட்​களுக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

புதுடெல்​லி/பெங்​களூரு: காவிரி​யில் தமிழகத்​துக்கு அடுத்த 15 நாட்​களுக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரை திறந்​து​ விடுமாறு கர்நாடக அரசுக்​கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்​தர​விட்​டுள்​ளது. டெல்​லி​யில் கடந்த 20-ம் தேதி நடந்த காவிரி நீர் ஒழுங்​காற்​றுக் குழு​வின் கூட்​டத்​தில் அதன் தலை​வர் வினீத் குப்தா, தமிழகத்​துக்கு அடுத்த 15 நாட்​களுக்கு வினாடிக்கு

2 ஆயிரம் கன அடி நீரை திறந்​து​விடு​மாறு கர்​நாடக அரசுக்கு பரிந்துரை செய்​தார். இதனை கர்​நாடக அரசு ஏற்க மறுத்​தது. இந்நிலை​யில், காவிரி மேலாண்மை ஆணை​யத்​தின் 62-வது கூட்டம், அதன் புதிய தலை​வர் பியூஷ் சிங் தலை​மை​யில் நேற்று டெல்லியில் நடை​பெற்​றது. இதில் தமிழ்​நாடு, கர்​நாட​கா, கேரளா, புதுச்​சேரி ஆகிய 4 மாநிலங்​களின் நீர்ப்​பாசனத்​துறை அதிகாரிகள் பங்​கேற்​றனர்.

போதிய மழை இல்லை

அப்​போது, கர்​நாடக அரசு தரப்​பில், “போ​திய மழை இல்​லாத​தால் கிருஷ்ண​ராஜ​சாகர், கபினி உள்​ளிட்ட 4 அணை​களி​லும் குறைந்த அளவில் நீர் இருப்​பில் உள்​ளது. எனவே, அடுத்த 15 நாட்​களுக்கு தமிழகத்​துக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரை திறந்​து​விட இயலாது” என தெரிவிக்​கப்​பட்​டது.

இதற்கு தமிழக அரசு தரப்​பில், “வறட்சி மற்​றும் நீர் பற்​றாக்​குறை காலத்​தில் நீர் பங்​கீடு செய்ய வேண்​டிய முறையை மாற்​றி, தமிழகத்​துக்கு அதிக அளவில் நீரை திறக்க உத்​தர​விட வேண்​டும்” என வலி​யுறுத்​தப்​பட்​டது.

இறு​தி​யில், ஆணை​யத்​தின் தலை​வர் பியூஷ் சிங், “கா​விரி நீர் ஒழுங்​காற்​றுக் குழு​வின் பரிந்​துரையை ஏற்​று, கர்​நாடக அரசு அடுத்த 15 நாட்​களுக்கு தமிழகத்​துக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் நீரைத் திறந்​து​விட வேண்​டும்” என உத்​தர​விட்​டார்.

Spread the love