November 2, 2026

தமிழகத்தை முந்திய ஆந்திரா! ரூ.1,614 கோடி கொரிய முதலீடுகள் கைமாறின!

சென்னை: தமிழ்நாட்டில் முதலீடு செய்யப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட மூன்று தென்கொரிய வாகன உதிரிபாக நிறுவனங்கள், ஆந்திராவில் ரூ.1,614 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளன.

ஹூண்டாய், கியா நிறுவனங்களுக்கு உதிரிபாகங்கள் வழங்கும் ஹ்வாஷின் ரூ.850 கோடி, செஷான் ரூ.514 கோடி, ஐவாமெட் ரூ.250 கோடி முதலீடு செய்ய உள்ளன. ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் அமையும் இத்தொழிற்சாலைகள் மூலம் 1,418 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திர அமைச்சர் நர லோகேஷின் தென்கொரியப் பயணத்தைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழகத்தில் முதலீடு செய்வது குறித்து முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், ஆந்திராவுக்கு முதலீடுகள் சென்றிருப்பது தொழில்துறை வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love