சென்னை: “தேர்தல் வாக்குறுதிகளோடு சேர்த்து 436 தொலைநோக்கு திட்டங்கள் குறித்து தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது,” என அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம், தலைமைச் செயலகத்தில் ‘வெற்றித் தமிழகம்’ என்ற பெயரில் இன்று நடைபெற்றது. இதையடுத்து, அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் சந்தித்தார். அப்போது அவர், “ஒவ்வொரு துறைக்கும் தொலைநோக்கு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதை அந்தந்த துறை அமைச்சர்கள், அதிகாரிகளோடு இணைந்து கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள். முதல்வர் விஜய் இது குறித்து அறிவுறுத்தினார்.
அதில் இளைஞர்கள் மேம்பாடு, முன்னேற்றம், மகளிர் மேம்பாடு, விவசாயிகள் மற்றும் மீனவர்கள் வளர்ச்சி, லஞ்சம் இல்லாத நல்லாட்சி, போதை இல்லாத தமிழகம் என அனைத்துத் துறைகளுக்கும் தொலைநோக்கு திட்டங்களை முதல்வர் வகுத்து கொடுத்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்டதையும் சேர்த்து, தற்போது 436 திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. குட்கா, போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேகேதாட்டு அணை கட்டும் விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.

More Stories
‘என்ன ஆனது உங்கள் வாக்குறுதி?’ – உணவுப் பொருள் விலை உயர்வு குறித்து பிரதமருக்கு காங். கேள்வி
புதுச்சேரியில் ஊதியம், பணி பாதுகாப்பு கோரி போராட்டம்: முடங்கிய பிஆர்டிசி மின்சார பேருந்து சேவை
சென்னையில் சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை 86,489 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி