தற்போதைய நிலவரப்படி தவெக 106, அதிமுக 62, திமுக 62 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி தவெக 106, அதிமுக 62, திமுக 62 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக, திமுக மாறி மாறி 2-ம் இடத்துக்கு போட்டாபோட்டியில் உள்ளன.
தமிழகம் முழுவதுமே மண்டலங்கள் கடந்து பரவலாக தவெக தொடர் முன்னிலையில் இருக்கிறது.
2 இடங்களில் வெற்றி: இதுவரை முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவந்த நிலையில் மதுரை மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் P.விஸ்வநாதன், கூடலூரில் திமுக வேட்பாளர் திராவிட மணி வெற்றி பெற்றுள்ளார்.
கொளத்தூர் ஷாக்! அதில் உச்சபட்சமாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். அவரைப் போலவே சீனியர் அமைச்சர்கள் பலரும் பின்னடைவை சந்தித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More Stories
2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க மத்திய அரசு இலக்கு
கடந்த நிதி ஆண்டில் பெல் நிறுவனம் ரூ.32,350 கோடி வருவாய் ஈட்டி சாதனை: செயல் இயக்குநர் தகவல்
சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாட்டுப் பயணம்; அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு நோட்டீஸ்