September 23, 2026

தவெக 105+ இடங்களில் முன்னிலை; 2-ம் இடத்துக்கு திமுக, அதிமுக கடும் போட்டி

தற்போதைய நிலவரப்படி தவெக 106, அதிமுக 62, திமுக 62 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போதைய நிலவரப்படி தவெக 106, அதிமுக 62, திமுக 62 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. அதிமுக, திமுக மாறி மாறி 2-ம் இடத்துக்கு போட்டாபோட்டியில் உள்ளன.

தமிழகம் முழுவதுமே மண்டலங்கள் கடந்து பரவலாக தவெக தொடர் முன்னிலையில் இருக்கிறது.

2 இடங்களில் வெற்றி: இதுவரை முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவந்த நிலையில் மதுரை மேலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் P.விஸ்வநாதன், கூடலூரில் திமுக வேட்பாளர் திராவிட மணி வெற்றி பெற்றுள்ளார்.

கொளத்தூர் ஷாக்! அதில் உச்சபட்சமாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். அவரைப் போலவே சீனியர் அமைச்சர்கள் பலரும் பின்னடைவை சந்தித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love