May 4, 2026

தாமஸ் கோப்பை பாட்மிண்டன் தொடர்: அரை இறுதியில் இந்திய அணி தோல்வி

ஹார்சென்ஸ்: டென்​மார்க்​கின் ஹார்​சென்ஸ் நகரில் தாமஸ் கோப்பை பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதன் அரை இறுதி சுற்​றில் இந்​திய ஆடவர் அணி நேற்று முன்​தினம் இரவு பிரான்ஸ் அணி​யுடன் மோதி​யது.

இதில் இந்​திய அணி 0-3 என்ற கணக்​கில் தோல்வி அடைந்து வெண்​கலப் பதக்​கம் பெற்று தொடரை நிறைவு செய்​தது. இந்​திய அணி​யில் காயம் காரண​மாக லக் ஷயா சென் களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக ஹெச்​.எஸ்​.பிர​னாய் விளை​யாடி​னார். முதலில் நடை​பெற்ற ஒற்​றையர் ஆட்​டத்​தில் இந்தி​யா​வின் ஆயுஷ் ஷெட்டி 11-21, 9-21 என்ற செட் கணக்​கில் உலகத் தரவரிசை​யில் 4-வது இடத்​தில் உள்ள கிறிஸ்டோ போபோவிடம் தோல்வி அடைந்​தார்.

4-வது முறையாக இதைத் தொடர்ந்து நடை​பெற்ற அடுத்த ஆட்டத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 16- 21, 18- 21 என்ற செட் கணக்​கில் 10-ம் நிலை வீர​ரான அலெக்ஸ் லானியரிடம் வீழ்ந்​தார். இதன் பின்னர் 3-வது ஆட்​டத்​தில் இந்​தி​யா​வின் ஹெச்​.எஸ்​.பிர​னாய், தோமா ஜூனியர் போபோவுடன் மோதி​னார். இதில் ஹெச்.எஸ்.பிர​னாய் 19- 21, 16-21 என்ற செட் கணக்​கில் தோல்வி அடைந்​தார்.

2022-ம் ஆண்டு சாம்​பிய​னான இந்​திய அணி தாமஸ் கோப்பை தொடரில் வெண்​கலப் பதக்​கம் வெல்​வது இது 4-வது முறையாகும். கடந்த 1952, 1955 மற்​றும் 1979ம் ஆண்​டு​களி​லும் இந்தியா வெண்​கலப் பதக்​கம்​ கைப்​பற்​றி​யிருந்​தது.

Spread the love