October 6, 2026

தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசு கலை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான நர்ணாவரே மனிஷ் சங்கர்ராவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் நாளைய தினம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. குறிப்பாக 320 வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு பதிவானது நடைபெற்ற உள்ளது. இதில் 18 வாக்குச்சாடிகள் பதட்டமான வாக்குச்சாவடியாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 3500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

இந்நிலையில், வாக்குப்பதிவு நடைபெற்ற பிறகு வாக்கு பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள எல்ஆர்ஜி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட உள்ளது.

பின்னர் அக்டோபர் 9ம் தேதி வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்ற உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான நர்ணாவரே மனிஷ் சங்கர்ராவ் ஐ.ஏ.எஸ் இன்று காலை ஆய்வு செய்தார்.மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும் ஆய்வு பணி மேற்கொண்டனர்.

Spread the love