திருப்பூர் வடக்கு மாநகர திராவிட முன்னேற்றக் கழகத்தில்பார்வர்டு பிளாக் மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், தினேஷ், கவியரசு, பாண்டி செல்வம், முனீஸ் பாண்டி , அருண் பாண்டியன் ஆகியோரின் தலைமையில், திருப்பூர் வடக்கு மாநகரக் கழகப் பொறுப்பாளர் ஈ. தங்கராஜ் முன்னிலையில், மாநகரக் கழக அலுவலகத்தில், 45 இளைஞர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில், திருப்பூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் விஸ்வநாதன், 2-ஆம் மண்டலத் தலைவர் தம்பி கோவிந்தராஜ், மாமன்ற உறுப்பினர்கள் கருப்புசாமி, விவிஜி காந்தி, மாநகரத் துணைச் செயலாளர் செங்குட்டுவன், மாவட்ட திமுக சிவபாலன், வட்டக் கழகச் செயலாளர்கள் ரத்தினசாமி, ஸ்ரீதர், மயில்சாமி, கேபிள் மோகன், பொங்கு பாளையம் சாமுவேல் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

More Stories
தேனி மாவட்டம்
தேனி மாவட்டம்
பழனி