
திருப்பதி கபிலதீா்த்தக்கரையில் எழுந்தருளியுள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் புதன்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது.
தேவஸ்தானத்துக்கு சொந்தமான இக்கோயிலில் மகாசிவராத்திரியை ஒட்டி வரும் பிப். 8 முதல் 17 வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
அதை முன்னிட்டு, புதன்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது. பிரம்மோற்சவங்களுக்கு முன்பு கோயில் முழுவதும் சுத்தப்படுத்தப்படுவது வழக்கம். அதன்படி ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
இதற்காக, புதன் சுப்ரபாதத்துடன் துயில் எழுப்பி கபிலேஸ்வர சுவாமிக்கும், காமாட்சி அம்மனுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பிறகு, காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் செய்யப்பட்டது.
இதில், கருவறை, கொடிமரம், துணை கோயில்கள், தரிசன வரிசைகள், பூஜை பொருள்கள், விளக்குகள், பிரம்மோற்சவத்திற்கு பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டன.
இதில், கோயிலின் சிறப்பு அதிகாரி டி. பானி குமாா் நாயுடு, கண்காணிப்பாளா் சந்திரசேகா், கோயில் குருக்கள் பங்கேற்றனா்.

More Stories
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கருட கொடியேற்றத்துடன் தொடங்கிய திருக்கல்யாண திருவிழா
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் வெண்ணைத்தாழி திருவிழா: திரளான பக்தர்கள் வழிபாடு
மயிலாப்பூர் ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஸ்ரீநிவாஸர் கோயிலில் மகா சம்ப்ரோக் ஷணம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்