திருப்பூர் வடக்கு மாநகரம் 16-ஆவது வட்டக் கழக இளைஞர் அணி அமைப்பாளர் சகோதரர் கிருபாகரன் அவர்களின் தாயார் மீனா அவர்களின் மருத்துவ உதவிக்காக, இளம் தலைவர், கழகத்தின் எதிர்காலம், மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்
அக்கோரிக்கையை ஏற்று, இளைஞர் அணி அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.25,000/- காசோலையை இன்று திருப்பூர் வடக்கு மாநகரக் கழக அலுவலகத்தில், சகோதரி மீனா அவர்களிடம் திருப்பூர் வடக்கு மாநகரக் கழகப் பொறுப்பாளர் ஈ. தங்கராஜ் வழங்கினார் இந்நிகழ்வில் மாநகர துணைச் செயலாளர்கள் ராமசாமி, செங்குட்டுவன், மாநகரப் பொருளாளர் சரவணகுமார், 2-ஆவது மண்டலத் தலைவர் தம்பி கோவிந்தராஜ், பாண்டியன் நகர் பகுதி அவைத் தலைவர் தயானந்தன், வட்டக் கழகச் செயலாளர்கள் மயில்சாமி, ரத்தினசாமி, சுரேஷ், கேபிள் மோகன், மாவட்ட திமுக நிர்வாகிகள் சிவபாலன், V.V.G. காந்தி, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் அரவிந்த், பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள் ராம்குமார், சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More Stories
25-08-2026
25-08-2026
25-08-2026