மாறுவோம் மாற்றுவோம் என்ற வி த லீடர் அமைப்பின் தலைமை தன்னார்வலர் திருஅண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளியங்காடு பகுதியில் வி த லீடர்ஸ் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் குப்பையை வீட்டில் இருந்தே தரம் பிரித்துக் கொடுக்கும் முயற்சியில் 150 வீடுகளுக்கு முதல் கட்டமாக அந்த மக்களிடமே நேரடியாகச் சென்று வீட்டில் இருக்கும் குப்பையை தரம் பிரித்துவீட்டிற்கு சென்று சேகரிக்க வரும் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் இடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆலோசனைகளை கூறி அனைத்து இல்லங்களுக்கும் வீத லீடர் அமைப்பின் சார்பாக மக்கும் குப்பையை மட்டும் தனியாக வைப்பதற்கு குப்பைத்தொட்டியை வழங்கி உள்ளார்கள். இந்த நிகழ்வில்வி த லீடர் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள்.வெ.துரைராஜ்மணிகண்டன்.வரதராஜ்.கார்த்திராமசாமி.சக்தி.நாகராஜ்.லட்சுமணன் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.மேலும் திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட வெள்ளியங்காடு காட்டுவளவு பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம்களும் நடத்தியுள்ளார்கள்.
திருப்பூர்

More Stories
கஞ்சி கலயத்தை தலையில் சுமந்து ஊர்வலத்தில் பங்கேற்ற அமைச்சர் கமலி…
திருப்பூர்
பழனியில் தமிழக வெள்ளாளர் பேரவை சார்பில் கல்வித் திருவிழா கந்த விலாஸ் என் செல்வகுமார் பங்கேற்பு,,,