பழனி செப்டம்பர் 7
பழனியில் தமிழக வெள்ளாளர் பேரவை சார்பில் 19 ஆம் ஆண்டு கல்வித் திருவிழா நேற்று நடைபெற்றது. இதற்கு பேரவையின் கௌரவ தலைவரும், பழனி ஸ்ரீ கந்த விலாஸ் அதிபருமான என் செல்வகுமார் தலைமை தாங்கினார். பின்பு அவர் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற வெள்ளாளர் சமூக மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ் கேடயம் வழங்கினர். மேலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசாக தங்க நாணயங்களும், மூன்றாம் இடத்தைப் பிடித்த பிடித்த மாணவருக்கு வெள்ளி நாணயம் வழங்கப்பட்டது. இதில் தமிழக வெள்ளாளர் பேரவை சேர்ந்த நிர்வாகிகள் ஆயக்குடி கே டி சிவசுப்பிரமணியன், ஜி பாலமுருகன், ராஜாமணி, துரைசாமி, சண்முகநாதன், பேராசிரியர் சிவ சண்முகம், சிவலிங்கம், ராமநாத கிருஷ்ணன், படக்கடை வீராச்சாமி, தமிழரசன், ஆயக்குடி முத்து, முன்னாள் கோயில் பேஸ்கார் சந்திரசேகர், மற்றும் பில்டிங் காண்ட்ராக்டர் பி நேரு, பெரியநாயகி கல்வி அறக்கட்டளை ஆ சுந்தரம், முன்னாள் கோவில் சூப்பிரண்டு நெய்க்காரப்பட்டி முருகேசன், பொம்ம கடை மணி, கோபி, சோலை தேவர், ஆடிட்டர் பாபவினாசம், ஆடிட்டர் சேகர், வழக்கறிஞர் ராமமூர்த்தி, உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். அனைவருக்கும் விருந்தும் வழங்கப்பட்டது.

More Stories
கஞ்சி கலயத்தை தலையில் சுமந்து ஊர்வலத்தில் பங்கேற்ற அமைச்சர் கமலி…
திருப்பூர்
திருப்பூர்