நவ24
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கருரில் நடந்தது.
மாவட்ட தலைவர் செந்தில் நாதன் தலைமை வகித்தார்.மாநில துறை தலைவர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.கூட்டத்திற்கு பின் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் கூறுகையில்
மதுரை திருப்பரங் குன்றம் தீபத்துாணில் இந்த ஆண்டு தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. கலெக்டர், எஸ்பி உட்பட 10 பேர் கொண்ட குழு மலையில் ஏறி தீபம் ஏற்றலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
ஆனால், முதல்வர் ஜோசப் விஜய் இந்த விவகாரத்தால் பதட்டம் ஏற்படும் என்கிறார். அவ ருக்குதான் பதட்டம் ஏற் பட்டுள்ளது. 2025ல் சென்னை ஐகோர்ட் நீதி பதி சுவாமிநாதன் அளித்த தீர்ப்பும், 2026ல் நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பும் தீபம் ஏற்றலாம் என்றுதான் உள்ளது. அதேதீர்ப்பைத்தான் சுப்ரீம் கோர்ட்டும் அளித்துள்ளது.
முதல்வர் ஜோசப் விஜய் மேடைகளில் அன்பளிப்பாக வழங்கப் படும் வேல் கம்பை பிடிக் கிறார். மூகாம்பிகை கோயிலுக்கு செல்கிறார். இதெல்லாம் வேஷமா. உங்கள் உள் நோக்கம்தான் என்ன?ஒட்டுமொத்த இந்துக்க ளின் விரோதி என்பதை நீங்கள் நிரூபிக்கிறீர்கள்.கோர்ட் தீர்ப்பை அமல்படுத்துவது முதல் வரின் பொறுப்பாகும். சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும் என்றால், அதை பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும். தீபம் ஏற்றும் விவகாரத் தில் நீங்கள் யாரை காப் பாற்ற நினைக்கிறீர்கள்.யாருடைய ஓட்டு வங்கிக்காக இதை தடுத்து ர்கள். இதை நிறுத்துகிறீர்கள். என்ன லாபம். நீங்கள் தடுக்ககூடாது என்றார்.

More Stories
ஒட்டன்சத்திரத்திற்கு பெருமை சேர்க்கும் வட்டச்சாலையில் செயலிழந்த மின் விளக்கு பெயர் பலகை, செயற்கை நீரூற்று!மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!.
கருரில் திமுக செயற்குழு கூட்டம்
இராசிபுரம்:போதமலை உச்சியில் செவ்வாய்க்கிழமை மகா தீபம் ஏற்ற ஏற்பாடு! கொப்பரைக்கு சிறப்பு பூஜை செய்து மலைக்கு அனுப்பி வைப்பு!