November 3, 2026

துணை முதல்வர் சுனேத்ரா பவாருக்கு எதிராக என்சிபி தலைவர்கள் போர்க்கொடி

புதுடெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) மூத்த தலைவர்கள், கட்சித் தலைவரும் துணை முதல்வருமான சுனேத்ரா பவாருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

அவர்கள், மத்திய அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர் மகாராஷ்டிர மாநில துணை முதல்​வர் சுனேத்ராவிடம் கலால், விளை​யாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் உள்​ளன. தனது கணவர் அஜித் பவார் வகித்த நிதித் துறையை வழங்​கக் கோரி முதல்​வர் தேவேந்​திர பட்​னாவி​ஸிடம் அவர் வலியுறுத்தி வரு​கிறார்.

மேலும் தேசி​ய​வாத காங்​கிரஸ் தலை​வர் பத​வி​யில் தனது மகன் பார்த் பவாரை நியமிக்​கவும் அவர் காய்​களை நகர்த்தி வரு​கிறார். இதற்கு கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள் கடும் ஆட்​சேபம் தெரி​வித்து உள்​ளனர். பகிரங்​க​மாக போர்க்​கொடி உயர்த்தி உள்​ளனர்.

இந்த சூழலில் தேசி​ய​வாத காங்​கிரஸ் (அஜித் பவார்) மூத்த தலை​வர்​கள் பிரபுல் படேல், சுனில் தாட்​கெரே, தனஞ்​செய் முண்டே் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை டெல்​லி​யில் நேற்று சந்​தித்​துப் பேசினர். அப்​போது சுனேத்ரா பவார், அவரது மகன் பார்த் பவா்ர் விவகாரம் குறித்து முக்​கிய ஆலோ​சனை நடத்​தப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

Spread the love