October 2, 2026

தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின்  ஆலோசனைக் கூட்டம்  கரூரில் அக்.1 ம் தேதி நடைபெற்றது.

 இக்கூட்டத்தில் கரூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.,

அட்டைப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப் பொருட்கள்  காகிதத்தின் விலை கடந்த இரண்டு மாதங்களில் மட்டும்,அட்டைப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மற்ற மூலப்-பொருட்களின் விலையும், 8 முறை உயர்ந்து, டன்னுக்கு ரூ8000 உயர்ந்துள்ளது . மேலும், தொழிலாளர்களின் சம்பளம், மின்கட்டணம் உள்ளிட்ட உற்பத்தி செலவுகளும் உயர்ந்துள்ளது.

 இந்த விலை உயர்வு அக்டோபர் 1ம்தேதி தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

 அட்டைப்பெட்டிகளுக்கு டெலிவரி கட்டணம் தனியாக வசூலிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மூலப்பொருட்களின் தொடர் விலை உயர்வை கருத்தில் கொண்டு, அதை பொதுமக்கள் மற்றும் உபயோகிப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், வரும் அக்டோபர்  9, 10 ஆகிய இரண்டு நாட்கள், அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்துவது   என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 2 நாட்கள் கரூர் ,கோவை நாமக்கல், சேலம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் 400 மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்காது .

மேலும் அட்டைப்பெட்டி உற்பத்தி மூலப்பொருட்கள் விலை உயர்வால் அக்டோபர் 1ம் தேதி முதல் 25 சதவீத விலை உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளது இதனை கரூரில் உள்ள டெக்ஸ்டைல் ஏற்றுமதி நிறுவனத்தை சார்ந்தவர்களும் மற்றும் இதர  அட்டைப்பெட்டி கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்களும், ஏற்றுக்கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும் இவ்வாறு மண் டல் தலைவர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.

Spread the love