October 1, 2026

15 சிறந்த கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கும் விழா

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையின் மூலம்  பாரம்பரிய கலைகள்பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி, கரூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் கலைப் பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டவர்களில், 18 வயதிற்குட்பட்ட 3 கலைஞர்களுக்கு கலை இளமணி விருதும், தலா ரூ.4,000 பரிசுத்தொகையும்; 19 முதல் 35 வயது வரையிலான 3 கலைஞர்களுக்கு கலை வளர்மணி விருதும், தலா ரூ.6,000 பரிசுத்தொகையும்; 36 முதல் 50 வயது வரையிலான 3 கலைஞர்களுக்கு கலைச்சுடர்மணி விருதும், தலா ரூ.10,000 பரிசுத்தொகையும்; 50 முதல் 65 வயது வரையிலான 3 கலைஞர்களுக்கு கலை நன்மணி விருதும், தலா ரூ.15,000 பரிசுத்தொகையும்; 65 வயதிற்கு மேற்பட்ட 3 கலைஞர்களுக்கு கலை முதுமணி விருதும், தலா ரூ.20,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.மொத்தம் 15 கலைஞர்களுக்கு விருதுகளையும், அதற்கான பரிசுத்தொகைகளையும் மாவட்ட ஆட்சியர்  சி. முத்துக்குமரன்,  வழங்கினார்.இதில் கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் (திருச்சி மண்டலம்)  த. செந்தில்குமார், கரூர் அரசு இசைப்பள்ளி முதல்வர் . ஆ.வி.செ. குருமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love