April 17, 2026

தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் .. “இது காலத்தின் கட்டாயம்” பிரதமர் மோடி பேச்சு!

தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள் என பிரதமர் பேச்சு.

மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை, யூனியன் பிரதேச தொகுதி சீரமைப்பு உள்ளிட்ட மூன்று முக்கிய மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரின் தீவிர எதிர்ப்புகளுக்கு இடையே தொகுதி மறுவரையறை மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்தது.

மேலும் தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் தனது பலத்தை இழக்காது என ஒன்றிய அமைச்சர் வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளார். ஆனால் மசோதாவில் இதுகுறித்த எழுப்பூர்வமான எந்த குறிப்பும் இடம்பெறவில்லை.


பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்

இந்த சூழலில்தான் பிரதமர் மோடி மசோதாக்கள் மீதான விவாதத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தொகுதி மறுசீரமைப்பில் எந்த ஒரு மாநிலத்திற்கும் அநீதி நடக்காது என அவர் உத்தரவாதம் அளித்துள்ளார். எதிர்க்கட்சிகள் அரசியல் காரணத்திற்காகவே இந்த தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கின்றனர் என தெரிவித்த அவர் தனிப்பட்ட முறையில் அனைவரும் மசோதாவை ஆதரிக்கின்றனர் எனபேசியிருந்தார்.மேலும் இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்களை கடந்த காலங்களில் பெண்கள் மன்னிக்கவில்லை எனக் கூறிய பிரதமர்,மகளிர் இது இட ஒதுக்கீட்டிற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் எனவும் ஒரு கேட்டுக் கொண்டார்.

  

தொடர்ந்து பேசிய பிரதமர், மசோதாக்களை தனிப்பட்ட முறையில் ஆதாரிக்கும் எதிர்க்கட்சிகள் பொதுவெளியில் எதிர்ப்பதன் அவசியம் என்ன எனவும் கேள்வி எழுப்பியிருக்கிறார். நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் இருக்கக்கூடிய வர்கள் தங்கள் உரிமை பெறும் நேரம் வந்துவிட்டது என பேசிய மோடி, தொடர்ந்து இந்த தொகுதி மறுவரையறை மசோதா வரலாற்றில் மிக முக்கியமான தருணம் என வர்ணித்தார்.

விஜய் மீது பிஜேபி சாயம் அடிக்கவே துடிக்கிறார்கள்..!
பெண்களின் இட ஒதுக்கிடை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது நோக்கம் என்ன எனவும் கேள்வி எழுப்பிய அவர் “மகளிருக்கான இட ஒதுக்கீடு காலத்தின் கட்டாயம்… இதனை எதிர்ப்பவர்களை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்” என தெரிவித்தார்.

மேலும் நமது நாடு செல்லும் திசையை நிர்ணயிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என பேசிய அவர் கடந்த 30 ஆண்டுகளில் பெண்கள் தலைமை பொறுப்புக்கு அதிக அளவில் வந்திருக்கின்றனர் எனவும் அவர் பேசியிருக்கிறார்.

Spread the love