August 7, 2026

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளு​மன்ற இரு அவைகளும் முடக்​கம்

புதுடெல்லி: எதிர்க்​கட்​சிகளின் அமளி​யால் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களும் நேற்று முடங்​கின. நாடாளு​மன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்​கியது. நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்​கள் மீது நடத்​தப்​பட்ட தடியடி, அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு உள்​ளிட்ட பல்​வேறு விவ​காரங்​களை எழுப்பி மழைக்​கால கூட்​டத் தொடரை எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து முடக்கி வரு​கின்​றன.

இந்த சூழலில் நேற்று காலை 11 மணிக்கு மக்​களவை கூடியது. அப்​போது கடந்த 1945-ம் ஆண்டு ஜப்​பானின் ஹிரோஷி​மா​வில் நடத்​தப்​பட்ட அணு குண்டு தாக்​குதலில் உயி​ரிழந்​தோருக்கு அஞ்சலி செலுத்​தப்​பட்​டது. பின்னர் எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் அமளியில் ஈடு​பட்​டனர். கடந்த ஜூலை 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி நடந்த பேரணி​யின்​போது மாணவர்​கள் மீது நடத்​தப்​பட்ட தடியடி குறித்து மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா அவை​யில் விளக்​கம் அளிக்க வேண்​டும் என்று அவர்கள் வலி​யுறுத்​தினர். கடும் அமளியால் பிற்​பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்​டும் அவை கூடிய​போது எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் வழக்​கம்​போல அமளி​யில் ஈடு​பட்​டனர். கடும் அமளிக்கு நடுவே வரி விதிப்பு மற்​றும் இதர சட்​டங்​கள் (திருத்த) மசோதா 2026-ஐ மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தாக்​கல் செய்​தார். இந்த மசோதா விவாதம் இன்றி நிறைவேற்​றப்​பட்​டது. இதன்​பிறகு தொடர் அமளி காரண​மாக நாள் முழு​வதும் மக்​களவை ஒத்திவைக்​கப்​பட்​டது.

மாநிலங்​களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. அப்​போது காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே பேசும்​போது, “மாணவர்​கள் மீது நடத்​தப்​பட்ட தடியடி தொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடி​யும்​, மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவும் அவை​யில் விளக்கம் வேண்​டும்” என்றார். இதற்கு நாடாளு​மன்ற விவ​காரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு, “மாநிலங்​களவைக்கு குறிப்​பிட்ட துறை​யின் அமைச்​சர் வர வேண்​டும் என்று கார்கே உத்​தர​விட முடி​யாது” என்றார்.

இந்த விவ​காரத்​தால் எதிர்க்​கட்​சி, ஆளும் கட்சி எம்​பிக்​கள் பரஸ்​பரம் கோஷமிட்​டனர். இதனால் பிற்​பகல் 2.15 மணி வரை அவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. மீண்​டும் மாநிலங்​களவை கூடிய​போது எதிர்க்​கட்சி எம்​பிக்​கள் கூச்​சல், குழப்​பத்​தில் ஈடு​பட்​டனர்.

காங்​கிரஸ் தலை​வர் கார்கே கூறும்​போது, “மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா ஆணவத்​துடன் செயல்​படு​கிறார். மாணவர்​கள் மீது பெல்​லட் குண்​டு​களை பயன்​படுத்​தி​யது குறித்து அவர் விளக்​கம் அளிக்க வேண்​டும்” என்றார். கடும் அமளி​யால் மாநிலங்​களவை ஒரு மணி நேரம் ஒத்​தி வைக்​கப்​பட்​டது. மீண்​டும் அவை கூடிய​போது மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன், நிதி ஒதுக்கீடு (எண் 3) மசோதா 2006 குறித்து பேசி​னார்.

பின்​னர் குரல் வாக்​கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்​றப்​பட்​டது. இந்த மசோதா மூலம் மத்​திய அரசின் கூடு​தல் செலவினங்களுக்காக ரூ.54,067 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டது. பின்​னர் மாலை 5 மணி அளவில் மாநிலங்​களவை நாள் முழு​வதும் ஒத்திவைக்கப்பட்​டது.

Spread the love