அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 2021ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தவுடன், நாமக்கல் பகுதிக்கு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். குறிப்பாக, நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சரக்கு போக்குவரத்தை விரைவுபடுத்தவும், புறநகர் பகுதிகளை இணைத்து பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் ரூ.401 கோடி செலவில் புதிய ரிங் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாநகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 313 கோடியில் நாமக்கல்லில் இணைக்கப்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு மலைப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ. 7 கோடி செலவில் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாவட்டத்திற்கு புதிய மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தொடக்கப்பட்டுள்ளது. நாமக்கல், மோகனூர் ரோட்டில் ரூ.90 கோடியில் அதிநவீன ஆவின் பால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.24 கோடியில் மோகனூர் பேரூராட்சிக்கு தனி குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாமக்கல் மாநகரில் புதிய சித்த மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 4 கோடி மதிப்பீட்டில் கொசவம்பட்டி ஏரி புதுப்பிக்கபட்டு நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நாமக்கல் தொகுதி அடுத்தகட்ட வளர்ச்சிக்கு சென்றிட அனைவரும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் நாமக்கல் கொமதேக எம்.பி.,மாதேஸ்வரன், எம்எல்ஏ ராமலிங்கம், தொகுதி பார்வையாளர் முனவர் ஜான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

More Stories
09-07-2026
09-07-2026
09-07-2026