March 14, 2026

நாமக்கல் மாவட்டத்தில்  கடன் உதவி 

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நாக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

மத்தியக்கூட்டுறவு வங்கி சேர்மன் ராஜேஷ்குமார், எம்.பி., விழாவில் கலந்துகொண்டு சிறந்த மகளிர் குழுவினருக்கு மணிமேகலை விருதுகளை வழங்கிப் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 13,179 மகளிர் குழுக்களில் 1,47,511 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களுக்கு வங்கி கடன் ரூ.3,300 கோடி, சமுதாய முதலீட்டுக் கடன் ரூ.14.80 கோடி, சுழல்நிதி ரூ.2.36 கோடி, வாழ்வாதாரநிதி ரூ.2.79 கோடி, வட்டார வணிக வளமையம் மூலம் ரூ. 2.50 கோடி கடனுதவி என, மொத்தம் 3,322,45 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என கூறினார்

Spread the love