ஒட்டன்சத்திரம் மார்ச்:
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட செயலாளர் சு.கணபதி அவர்கள் தலைமையில் ஒட்டன்சத்திரம் பயணியர் மாளிகையில் நடைபெற்றது. நிர்வாகி குழு சந்திப்பில் பல்வேறு தீர்மானங்கள் நடைபெற்றது அதில் ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் பொறுப்புகளை விரைவாக தேர்வு செய்து பட்டியலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனிடம் ஒப்படைத்து விரைவில் நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதில் முக்கிய தீர்மானமாக இந்த பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய மக்களின் நீண்டநாள் கோரிக்கையான புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடைய திருஉருவ சிலையை நிறுவ வேண்டும் என்று மிக முக்கியமான கோரிக்கையை தீர்மானமாக மாவட்ட நிர்வாக குழு சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

More Stories
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவது குறித்த முன்னேற்பாடுகள் பணிகள் கூட்டம்